அயோத்தி ராமர் சிலை வடிவமைக்க... 6 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள் - பாறைகள் எடை எவ்வளவு தெரியுமா?
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டுப்பட்டு வரும் ராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்படும் ராமர் சிலையை வடிவமைப்பதற்கான கல் நேபாள நாட்டின் நதிக்கரையில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நதிக்கரையில் மட்டுமே காணப்படும் ஷாலிகிராம் என்ற இரு கற்கள் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சுமார் 26 மற்றும் 14 டன் எடை கொண்ட இந்த இரு கற்கள் 6 கோடி ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
இந்த பிரமாண்ட கற்களில் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு கோவிலில் வைக்கப்பட உள்ளன.
ராமர் சிலை உருவாகும் ஷாலிகிராம் கல், கண்டகி நதிக்கரையில் கண்டெடுத்ததாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.