மாணவர்களின் கவனத்திற்கு..! நாளை காலை எத்தனை மணிக்கு வெளியாகிறது +2 ரிசல்ட்... வெளியான அறிவிப்பு

Update: 2023-05-07 10:29 GMT

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படுகின்றன.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில், 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு முடிவு கடந்த 5ம் தேதி வெளியாக இருந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னையில் வெளியிடுகிறார். தேர்வுத்துறை அறிவித்துள்ள 4 இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அனைத்து பள்ளிகளிலும் பாடவாரியான மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்