கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதல் விவகாரம் - உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Update: 2022-09-02 08:43 GMT

கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதல் தொடர்பான விவரங்களை சேகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரி, பெங்களூர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மஷாடோ, தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கொலின் கன்சால்வேஸ் ஆஜராகி, நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருகிறது என்றும், பிரார்த்தனை கூட்டங்களுக்கு தடை ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மறுப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதல் தொடர்பான விவரங்களை பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநில அரசுகளிடமிருந்து சேகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் தாக்குதல் தொடர்பான வழக்குகள் பதிவு, கைது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஆகிய விவரங்களை மதிய உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கவும் மேற்கண்ட மாநிலங்களுக்கு 2 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது

Tags:    

மேலும் செய்திகள்