கடப்பாரையால் ஏடிஎம்-ஐ உடைத்த திருட்டு கும்பல் - சைரன் சத்தம் கேட்டதும் எஸ்கேப் | Kanchipuram

Update: 2023-03-10 09:15 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  • வாலாஜாபாத் அருகே காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள திம்மராஜம் பேட்டையில் தனியார் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
  • அங்கு இரவில் வந்த மர்மகும்பல் கடப்பாரையால் உடைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
  • அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வாகனத்தின் சைய்ரன் ஒலி கேட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.
  • இதில், பணம் ஏதும் கொள்ளையடிக்கப்படாத நிலையில், கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்