சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.