பெண்கள் முன்னேற்றத்துக்காக விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் ஆஷா மால்வியா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களைக் கடந்து, தற்போது தமிழ்நாட்டுக்கு ஆஷா மால்வியா வந்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது, காந்தி தொடர்பான புத்தகத்தை ஆஷா மால்வியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.