"சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா" - திருச்செந்தூரில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள்..

Update: 2023-07-23 15:00 GMT

வளர்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருவார்கள். இந்நிலையில் வளர்பிறை சஷ்டி தினமான இன்று, உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தனர். கடற்கரையை ஒட்டியுள்ள புனித கிணறான நாழி கிணற்றில் நீராடிய அவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

https://youtu.be/wwG2kxlFxec

Tags:    

மேலும் செய்திகள்