#JUSTIN || மோதிக்கொண்ட தமிழக இளைஞர்களும், வடமாநில தொழிலாளர்களும்.. உச்சகட்ட பரபரப்பில் திருப்பூர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள (கௌரி கிருஷ்ணா) தனியார் உணவகத்தில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இன்று விடுமுறை என்பதால் மூன்று வட மாநில இளைஞர்கள் அருகில் உள்ள தனியார் மதுபான கூட்டத்தில் மது அருந்தி உள்ளனர். அங்கு தமிழக இளைஞர்கள் ஏழு பேர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து மதுபான கூடத்தில் இருந்து வெளியேறிய இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். பின்னர் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வருவதை அறிந்து வட மாநில இளைஞர்கள் உணவகத்தின் உள்ளே சென்று கதவை தாழிட்டு கொண்டனர். இதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த தமிழக இளைஞர்கள் நீண்ட நேரம் கதவை தட்டிப் பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர் மேலும் இவர்கள் மோதலின் போது தூக்கி வீசப்பட்ட கல் அருகில் இருந்த பேக்கரி கிடைக்கும் சென்று விழுந்தது இதில் பேக்கரியில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.