குடிபோதைலயில் தகராறு.... தட்டிக்கேட்ட தந்தையை கழுத்தை அறுத்த மகன்

Update: 2022-09-05 08:38 GMT

அமைந்தகரையில் குடிபோதையில் தந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு காவல் நிலையத்தில் மகன் சரணடைந்தார். அமைந்தகரை, செனாய் நகர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன், குடித்துவிட்டு வந்து மதுபோதையில் மனைவி மற்றும் மகனை அடித்து தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட அவரது தந்தை சாகுல் அமீது-வின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பித்துச் சென்றார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய சாகுல் அமீது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தந்தையின் கழுத்தை அறுத்துவிட்டதாக கூறி அமைந்தகரை காவல் நிலையத்தில் சதாம் உசேன் சரணடைந்தார். தந்தையின் கழுத்தை மகனே அறுத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்