தீபாவளிக்கு ஊருக்கு போறிங்களா..? - எந்த ஊர்களுக்கு எவ்வளவு கட்டணம்..? - ஆம்னி கட்டண விபரம் இதோ...

Update: 2022-09-21 10:37 GMT

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை www.aoboa.co.

 இந்த என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது

 அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ஏசி இல்லாத இருக்கை வசதி பேருந்தில் 690 முதல் ஆயிரத்து 170 ரூபாய் வரையும், படுக்கை வசதி பேருந்தில் 930 முதல் ஆயிரத்து 580 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏசியுடன் கூடிய இருக்கை வசதி பேருந்தில் 870 முதல் ஆயிரத்து 490 வரையும், ஏசி படுக்கை வசதி பேருந்தில் ஆயிரத்து 170 முதல், 2 ஆயிரம் வரையும் கட்டணம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ஏசி இல்லாத இருக்கை வசதி பேருந்தில் 870 முதல் ஆயிரத்து 490 வரையும், படுக்கை வசதி பேருந்தில் ஆயிரத்து 200 முதல் 2 ஆயிரத்து 50 வரையும் கட்டணம் வசூலிக்கலாம் என்றும்

ஏசி இருக்கை வசதி பேருந்தில் ஆயிரத்து 140 முதல் ஆயிரத்து 940 வரையும், ஏசி படுக்கை வசதியில் ஆயிரத்து 450 முதல் 2 ஆயிரத்து 530 வரை கட்டணம் வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்லும் ஏசி அல்லாத இருக்கை வசதி பேருந்தி 720 முதல் ஆயிரத்து 240 வரையும், படுக்சை வசதி பேருந்து 990 முதல் ஆயிரத்து 690 வரையும்,

ஏசி இருக்கை வசதி பேருந்தில் 940 முதல் ஆயிரத்து 600 வரையும், ஏசி படுக்கை வசதி பேருந்தில் ஆயிரத்து 190 முதல் 2 ஆயிரத்து 30 வரை கட்டணம் வசூலிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்