"எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புகை சான்றா?" - பரபரப்பை கிளப்பிய கேரள போலீஸ்

Update: 2022-09-13 06:32 GMT

மின்சார ஸ்கூட்டருக்கு புகைச் சான்று இல்லை எனக்கூறி கேரள போலீசார் அபராதம் விதித்திருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கேரள பதிவெண் கொண்ட மின்சார பைக்கிற்கு, கடந்த 6ஆம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை எனக்கூறி கேரள போலீசார் 250 ரூபாய் விதித்துள்ளனர். இந்த ரசீதையும், மின்சார ஸ்கூட்டரின் படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ஸ்கூட்டர் நிறுவனத்தின் சிஇஓ தருன் மேத்தாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். அதற்கு, முடியவில்லை என்பதை குறிக்கும் வகையில் பெருமூச்சு விடுவதாக தருன் மேத்தா பதிலளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்