- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 7 மணி நேர தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
- நாட்டின் நலனுக்காக ஹோலி பண்டிகை அன்று, நாள் முழுவதும் தியானத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்.
- அதன்படி, காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கினார்.
- மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களை கட்டியவர்களை பிரதமர் சிறையில் தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கோடிக்கணக்கில் திருடியவர்களை கட்டித் தழுவுவதாக விமர்சித்துள்ளார்.
- இதனால், நாட்டு நலனுக்காக மாலை 5 மணி வரை, 7 மணி நேரம் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட உள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.