சண்டையை விலக்கிவிட்டதால் ஆத்திரம்… தலையில் கல்லை போட்டு கொடூர கொலை

Update: 2023-05-19 18:33 GMT

ரண்டு பேரும் வெறித்தனமா சண்ட போட்டு அத கண்டுக்காம அமைதியா போய்டனும்னு எல்லாரும் சொல்லுவாங்க...ஏன் அப்டி சொல்றாங்கனு ரொம்ப யோசிக்காதிங்க...இந்த கதைய பாத்தா உங்களுக்கே புரியும்.


குருதியால் நனைந்து கிடக்கும் இந்த ஹாலோபிலாக் கல்தான் நடந்த பயங்கரத்தின் முதல் சாட்சி.


கோவில் வாசலில் படுத்திருந்தவர், தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

கொலை செய்த குற்றவாளி வெகுதூரத்தில் இல்லை… இதோ இந்த ஏரியிலிருக்கும் புதருக்குள் தான் மறைந்திருக்கிறார்…

குற்றவாளியை கண்டுபிடித்து உண்மையை கண்டறிய காவல்துறையோடும் பரிசலில் நாமும் தேடுதல் வேட்டையில் இறங்கினோம்…

கொலை நடந்தது ஆரணி அடுத்துள்ள விளைசித்தேரி கிராமம். கொல்லப்பட்டவர் சேட்டு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பால் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.

விடியற்காலையிலேயே மாடுகளை ஓட்டி வந்து பால்கறக்க வேண்டும் என்பதால் இரவு வீட்டில் உறங்காமல் அதே கிராமத்திலிருக்கும் கோவிலில் உறங்குவது சேட்டின் வழக்கம்.

சம்பவத்தன்று இரவு எப்போதும் போல் கோவில் வாசலிலேயே படுத்து உறங்கியிருக்கிறார் சேட்டு.

எமன் போதை ஆசாமி உருவத்தில் சேட்டுவை தேடி வந்திருக்கிறது.

அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சிவசங்கர் என்ற இரண்டு போதை ஆசாமிகள் மது குடித்துவிட்டு கோவில் பக்கம் வந்திருக்கிறார்கள்…

சிவசங்கரோ மதுகுடிப்பதையே முழுநேர வேலையாக வைத்திருப்பவர்.


சரக்கு அடித்துவிட்டு சைடிஷ் சாப்பிடுவதற்கு பதில் அருகிலிருப்பவரிடம் சண்டைபோட்டால் தான் சிவசங்கருக்கு போதையே ஏறும்…

இதனாலேயே இந்த ஊரிலிருக்கும் பலரும் இவர்கள் சண்டையை பெரிதாக பொருட்படுத்துவதில்லை…

சம்பவத்தன்று சிவசங்கரும் அவரது நண்பரும் தெளிய தெளிய மதுகுடித்திருக்கிறார்கள். பிறகு கோவில் பக்கம் வந்த சிவசங்கர் வழக்கம்போல் தன்னுடைய நண்பரிடம் கட்டிங் வாங்கிகொடுக்குமாறு சண்டையிட்டிருக்கிறார். இருவரும் மாற்றி மாற்றி தாக்கிகொண்டதில் வாய்தகராறு கைக்கலப்பில் முடிந்திருக்கிறது. இதைப்பார்த்த சேட்டு இருவரையும் சமாதானம் செய்து சண்டையை விலக்கி விட்டிருக்கிறார்.

சேட்டுவின் அட்வைஸ் ஏற்கனவே போதை வெறியிலிருந்த சிவசங்கரின் ஈகோவை சீண்ட ஹாலோபிலாக் கல்லை தலையில் போட்டிருக்கிறார்.

இந்த தாக்குதலில் சேட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார்.

பொழுது விடிந்திருக்கிறது… சேட்டு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கோவில் பக்கம் வந்து பார்த்திருக்கிறார்கள்.

சேட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார் ஊர்காரர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் தான் சிவசங்கர் சேட்டுவை கொலைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்