மது போதையில் ஏற்பட்ட தகராறு... கத்தியை காட்டி மிரட்டிய நண்பனை போட்டு தள்ளிய சக நண்பர்கள் - சென்னையில் பயங்கரம்
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 21 வயதான பம்ப் அஜய் என்பவர், புதுவண்ணாரப் பேட்டையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மதுபோதையில் நண்பர்களுக்குள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தான் கொண்டு வந்த கத்தியை காட்டி பம்ப் அஜய் மிரட்டியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், அதே கத்தியால் பம்ப் அஜய்யை சரமாரியாக குத்தியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.