சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4.52 லட்சம் பறிமுதல் - 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு

Update: 2022-11-06 11:36 GMT

சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4.52 லட்சம் பறிமுதல் - 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு


கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 4லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சத்து 52 ஆயிரத்து 800 ரூபாய் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொறுப்பு சார் பதிவாளர் சுப்பையா, புரோக்கர்கள் ராம்குமார், ஜெயா, கலை செல்வன், ராஜேஷ், குமார், சுஜி, சுபாஜினி ஆகிய 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பையா அடுத்த ஆண்டு பணிநிறைவடையும் தருவாயில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்