கன்னியாகுமரியில் தொடக்க கூட்டறவு சங்க தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரணியல் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த ரோஸ்லின் பிரேமலதா அதிமுக ஆளூர் பேரூராட்சி முன்னாள் தலைவி ஆவார். தற்போது வீராணி தொடக்க கூட்டறவு சங்க தலைவியாக பதவி வகித்து வருகிறார். இவர் பேரூராட்சி தலைவியாக பதவி வகித்த போது முறைகேடாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் சுகுமாரன் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரோஸ்லின் பிரேமலதாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தவு பிறபித்தார். அதன் பேரில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் உதவி கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமையில் 6 போலீசார் ரோஸ்லின் பிரேமலதா வீட்டில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.