ஒடிசாவில் மீண்டும் ஒரு கோர விபத்து.. தானாக நகர்ந்த ரயில் பெட்டிகள்.. தண்டவாளத்தில் தெறித்த மனித ரத்த கறைகள்

Update: 2023-06-09 05:53 GMT

ஒடிசா ரயில் விபத்தின் ரத்த கறைகள் மறைவதற்குள், மீண்டும் ஓர் கோர விபத்து ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

இந்தியாவின் கருப்பு தினமாக கருதும் அளவுக்கு 275 அப்பாவி மக்களின் உயிரை பறித்த விபத்து...

கோரம், ரணம், பதைபதைப்பு.... என அத்தனைக்கும் விளக்கம் தந்த ஓர் விபத்து...

அடையாளம் தெரியாமலேயே மண்ணை விட்டு போன உயிர்கள் ஒரு பக்கம்...

உயிரிழந்த ஒருவரின் நலம் அறிய அவரின் உறவினர் அழைத்த செல்போன் அழைப்பின் ஒலி ஒரு பக்கம்...

தன்னை செதுக்கிய கவிஞனை பறிகொடுத்து, ரத்த கரைகளுடன் மீட்கப்பட்ட காதல் கடிதம் ஒரு பக்கம் என அனைவரின் மனதையும் உலுக்கி பேரிடியாக விழுந்தது ஒடிசா ரயில் விபத்து...

இந்த விபத்தின் தடையங்களும், ரத்த கரைகளும் மறைவதற்குள் மீண்டும் ஓர் கோர விபத்து அரங்கேறியுள்ளது ஒடிசாவின் உள்ள ரயில் நிலையத்தில்....

ஒடிசாவின் கியோஞ்கர் அருகே ஜாஜ்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது...

இந்த பணியில் சில ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்ட நிலையில், பணியின் போது திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வேலையை பாதியிலேயே நிறுத்திய ஊழியர்கள், அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்டிகளின் கீழே தஞ்சமடைந்துள்ளனர்...

தொழிலாளர்கள் தஞ்சமடைந்த சரக்கு ரெயில் பெட்டிகள் என்ஜினோடு இணைக்கப்படாமல் தனித்தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது...

இந்நிலையில், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சரக்கு ரயில் பெட்டிகள் எதிர்பாராத விதமாக 18 ரயில் பெட்டிகள் நகரத் தொடங்கியுள்ளது....

இதையறிந்து, சுதாரிப்பதற்குள் பெட்டியின் கீழே நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் பெட்டிகள் ஏறி இறங்கியதில், தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தது கேட்போரை பதைபதைக்க செய்தது...

இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது...

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் பணம் இழப்பீடாக வழங்க ஒடிசா முதல்வர் உத்தரவிட்ட நிலையில், ஏற்கெனவே பாலசோர் ரயில் விபத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் அரங்கேறிய ஜாஜ்பூர் ரயில் நிலைய விபத்து அனைவரின் மனதை ரணமாக்கியுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்