புதிய மன்னர் அறிவிப்பு... அரண்மனையில் திரண்ட அரசியல் தலைவர்கள்
மறைந்த எலிசபெத் ராணியின் மகன் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து வந்த ராணி எலிசபெத் கடந்த வியாழக்கிழமை காலமானார். இவரது மறைவை தொடர்ந்து புதிய மன்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் லிஸ் டிரஸ், முன்னாள் பிரதமர்கள் போரீஸ் ஜான்சன், தெரசா மே, டேவிட் கேமரூன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது ராணி எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ், புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டு தனிச்சபையில் முறைப்படி அறிவிக்கப்பட்டார்.