சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் ஆனித்திருமஞ்சன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில், உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க, கொடி மரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு,10 நாட்களுக்கு உற்சவ சுவாமி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ம் தேதியும், தரிசன விழா 26ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.