குடிக்க காசில்லாமல் ATM-இல் கை வைத்த நபர் - வைரலான CCTV காட்சி | Andhra | ATM Theft |
ஆந்திர மாநிலத்தில் குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.