வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று 31 ஆண்டுகள் ஊர் திரும்பாத முதியவர் | இறுதியில் நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2022-07-31 12:46 GMT

சின்னசேலம் அருகே உள்ள கருந்தலக்குறிச்சியைச் சேர்ந்தவர் பச்சமுத்து. கடந்த 1991 ஆம் ஆண்டு பணிக்காக பஹ்ரைன் சென்ற இவர் வீட்டுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இவரை கண்டுபிடித்து தரக்கோரி அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்த அவரது குடும்பத்தினர், ஒரு கட்டத்தில் அவரை தேடும் பணியை கைவிட்டனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து அண்மையில் பஹ்ரைன் சென்ற ஒருவர் பச்சமுத்து இருக்கும் இடம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பச்சைமுத்துவை மீட்டுத் தரக் கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர் இதுகுறித்து, அளித்த தகவலின் பேரில் பஹ்ரைனில் பச்சைமுத்துவை மீட்ட அன்னை தமிழ் மன்றம் அமைப்பினர் அவருக்கு தேவையான உதவிகளை செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். சுமார் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பிய பச்சைமுத்துவை அவரது குடும்பத்தினர் ஆரத் தழுவி வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்