தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்..! மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் - போதை தெளிய தெளிய 3 நாட்கள்..
- தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த 65 வயது முதியவர் 3 நாட்களுக்கு பிறகு காயமின்றி உயிருடன் மீட்கப்பட்டார்.
- சிலமரத்துப்பட்டியை சேர்ந்த உதயசூரியன், கடந்த செவ்வாய்கிழமை கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு மது அருந்தியுள்ளார்.
- திரும்பி வழும் வழியில் சோளத்தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 3 நாட்களாக முதியவரை காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது.
- இதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவரை மீட்டனர்.