நகராட்சி அலுவலகத்தில் வெடித்த உட்கட்சி விவகாரம்.. ஒருவருக்கொருவரை தாக்கிக்கொண்ட திமுக கவுன்சிலர்கள்

Update: 2022-10-08 02:33 GMT

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் தாங்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்மன்ற கூட்டம் முடிந்த பிறகு, 15வது வார்டு திமுக கவுன்சிலர் யுவராணி ராஜாவும்,17வது வார்டு திமுக கவுன்சிலர் ஞானவேலுவும் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். அப்போது, யுவராணி ராஜாவின் ஆதரவாளர்கள் ஞானவேலுவை சரமாரியாக தாக்கினர். அதே நேரத்தில், யுவராணி ராஜாவின் உறவினரும் 11வது வார்டு கவுன்சிலருமான பாபுவும் சேர்ந்து தாக்குதல் நடத்தினர். நகர மன்ற அலுவலகத்தில் தாக்குதல் நடந்த‌தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்