ஆரோக்கியமாக இருந்த சிசு நர்ஸ்கள் செய்த செயலால் கை முறிந்து பிறந்த பரிதாபம் - கதறிய தாய்

Update: 2022-11-02 06:07 GMT

ஒசூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால், பச்சிளம் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மனைவி வசந்தாவுக்கு, பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி, உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர் இல்லாததால், செவிலியர்களே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த போது, குழந்தையின் வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, எலும்பு முறிவு குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்காமல், உடனடியாக குழந்தையையும் தாயையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு செவிலியர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னரே குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது குறித்து உறவினர்களுக்கு தெரியவந்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், உத்தனப்பள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்