புதுச்சேரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அம்மாநில திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரி மாநில திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமண விழா, இன்று நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புதுச்சேரி சென்றார். அவரை, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.