- அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
- பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்ய அம்மாநில அரசு முயன்று வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்குள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- அவ்வாறு அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடந்த நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற லலித் கே ஜா என்ற பத்திரிகையாளரை சூழ்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த காவலர்களால் அவர் மீட்கப்பட்டார்.