பைக் மீது மோதி கவிழ்ந்து சுழன்று சுழன்று விழுந்த ஆம்புலன்ஸ் - 8 மாத குழந்தை, தாய், தந்தைக்கு நேர்ந்த கொடூரம்
- கனியாமூரில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாத குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்திக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்.
- இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது 8 மாத குழந்தை ஐஸ்விகாவை தனியார் ஆம்புலன்ஸ் அழைத்துச் சென்றார்.
- ஆம்புலன்ஸை ஓட்டி வந்த பிரபு என்பவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படும் நிலையில், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.
- இதில், விஜயகுமார், அவரது மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
- மேலும், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தப்பிச் சென்ற நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது