அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் - சசிகலா மனுவை நிராகரிக்க கோரி மேல்முறையீடு

Update: 2023-04-28 02:09 GMT

அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக, வி.கே. சசிகலா மனுவை நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக செம்மலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்