அதிமுக வழக்குகள் - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை | aiadmk Case | Chennai HC | OPS | EPS
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
- கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக, உரிய பதிலளிக்கும் படி எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அன்றைய தினம் மாலையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச்26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் சேர்த்து மார்ச் 22-ம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்தது.
- அதுவரை பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
- இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.