திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் தேர்வான உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். திமுக இளைஞரணியை 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து வலுப்படுத்திய மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றது பெருமிதம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.