வரும் கல்வி ஆண்டில் 6 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் 408 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தனியார் பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கும் நாட்களில், விண்ணப்பம் செய்து பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு பிறகு இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். அதன் படி இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், 6 தனியார் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த கல்லூரிகள் மூடப்பட இருப்பதாகவும், மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 402 என்ற அளவில் வரும் கல்வி ஆண்டில் குறையும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.