"பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை?" - உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவாதம்
தமிழகத்தில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வது தொடர்பாக 1996 ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. இது குறித்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பாக அரசாணை பிறப்பித்த போதும், அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது வரை மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வு, டாஸ்மாக் அளித்த உத்தரவாதத்தை ஏற்று, வழக்கை முடித்து வைத்தது.