ஆதித்தனார் செவிலியர் கல்லூரி 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா - சிறப்பு விருந்தினராக மருத்துவர் ராகேஷ்

Update: 2023-07-23 19:22 GMT

செவிலியர்கள் மனித நேயத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும் என தூத்துக்குடி அரசு மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை நிபுணர் ராகேஷ் பர்னான்டோ அறிவுறுத்தியுள்ளார். திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அறுவை சிகிச்சை நிபுணர் ராகேஷ் பர்னான்டோ, 35 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழலில், செவிலியர்கள் தங்கள் அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதேபோல், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்