"அதானி விவகாரம் விவாதிக்க வேண்டும்" - நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி லண்டன் சென்றிருந்த போது இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை ஒடுக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜகவினர் நாடாளுமறத்தில் வலியுறுத்தினர். இந்நிலையில், அதானி தொடர்பாக வெளியான அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் தனியார் நிறுவனத்தின் கடன் விவரங்களை விவாதிக்க முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்து விட்டார். இதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கைகளில் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.