அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது...
'களத்தூர் கண்ணாம்மா'வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி, இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, பெங்காலி மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர், பல விருதுகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். இந்த நிலையில், கமல்ஹாசனின் திரை பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், இந்திய திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கியபோது, அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்