பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் நிரப்ப கோரிக்கை எழுந்த நிலையில், மீண்டும் அப்பணியை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன்படி, தொடக்க கல்வித்துறை இயக்குநராக இருந்த அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாடநூல் கழகத்தில் உறுப்பினர் செயலராக இருக்கும் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் கூடுதல் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராகவும், இந்த பணியிடத்தில் உள்ள பழனிசாமி, முறைசாரா கல்வி இயக்குனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முறைசாரா கல்வி இயக்குனராக இருக்கும் குப்புசாமி, பாடநூல் கழக உறுப்பினர் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வந்த இணை இயக்குனர்கள் நரேஷ், ராமசாமி உள்ளிட்ட ஏழு இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.