ஒடிசா ரயில் விபத்து - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை

Update: 2023-06-04 10:21 GMT

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியோர் - அவர்களது குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை வழங்கி, உதவி செய்யும் விதமாக புவனேஸ்வர் மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, இந்தியாவின் வெவ்வேறு ஊர்களில் இருந்து தவிப்போடும் - ஏக்கத்துடனும் ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.அங்குள்ள அலுவலர்கள் இரவு - பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் பணி, விபத்தில் சிக்கியோரை அடையாளம் கண்டறிவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்து 2 வது நாளாக தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஒடிசாவில் முகாமிட்டுள்ளனர்.... புவனேஸ்வர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சிவசங்கர் பணிந்தீர ரெட்டி ஐ.ஏ.எஸ் குழுவினர்...... விபத்தில் சிக்கியோரை அடையாளம் கண்டறியும் சிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக பயணிகளின் நிலவரத்தை கேட்டறிந்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்