சென்னை மெட்ரோ பணியில் அசம்பாவிதம்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல் - 2 என்ஜினியர்கள் செய்த பகீர் காரியம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி அரசுப் பேருந்து சென்றது.
ராமாபுரம் அருகே, மெட்ரோ ரயில் பணியின் போது, இரும்பு கம்பிகளுடன் கிரேன் சரிந்து பேருந்து மீது விழுந்தது.
இதில், மாநகர பேருந்து ஓட்டுநர்கள் இருவர், டிரெய்லர் லாரி ஓட்டுநர் ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர்
. இது தொடர்பாக, ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கிரேன் ஆபரேட்டராக பணியாற்றிய தர்மேந்திர குமார் சிங் என்பவர், போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
இதனிடையே, போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த என்ஜினியர்கள் சிவானந்த், சந்திரசேகர் ஆகியோரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.