அதிகமாக ஆப்சென்ட் ஆனால் அபராதம்.. கல்லூரி மாணவர்களுக்கு உத்தரவு

Update: 2023-04-04 03:04 GMT
  • ஒரு பருவத்தில் 85 சதவீதம் வருகை புரியாத மாணவர்களுக்கு, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
  • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், வரும் மே மற்றும் ஜீன் மாதங்களில் நடைபெறும் முதல் பருவத்தேர்வில், சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
  • இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பில், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
  • அதில் குறைந்தபட்ச வருகைப்பதிவேடு இல்லாத மாணவர்களின் விவரங்களை, வரும் 6ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • மேலும் அனைத்து மாணவர்களும் 85 சதவீதம் வருகை புரிய வேண்டும் எனவும், 75 முதல் 84 சதவீதம் வரை வருகைப் பதிவு உள்ள மாணவர்களை, மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆனால் வருகைப்பதிவு குறைந்ததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்