ஆவின் பால் பாக்கெட்டுகள்..எந்தெந்த கலரில் என்னென்ன சத்து..? இனி இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்

Update: 2023-05-11 06:25 GMT

ஆவின் நிறுவனம், புதிதாக பதப்படுத்தப்பட்ட பசும்பால் விற்பனையை தொடங்கியுள்ளது. ஆவின் பாலில் உள்ள சத்து பொருட்கள் பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....

தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம், தற்போது தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது.

வைட்டமின் ஏ மற்றும் டி அதிகம் கொண்ட, செறிவூட்டப் பட்ட பசும் பால், வைலட் நிற பாக்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிகப்பு நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் டயட் பாலில், அரை லிட்டருக்கு ஒன்ரை கிராம் கொழுப்பு மற்றும் 3.4 கிராம் புரதமும், 4.9 கிராம் மாவு சத்தும்,

740 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 48 கிலோ கலோரி அளவுக்கு சக்தி உள்ளது.

பச்சை நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலில், அரை லிட்டருக்கு 4.5 கிராம் கொழுப்பு மற்றும் 3.2 கிராம் புரதம், 4.7 கிராம் மாவு சத்தும்,

700 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 74 கிலோ கலோரி அளவுக்கு சக்தி உள்ளது.

வெளிர் நீல நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் நைஸ் பாலில், அரை லிட்டருக்கு 3 கிராம் கொழுப்பு மற்றும் 3.2 கிராம் புரதமும், 4.7 கிராம் மாவு சத்தும்,

700 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 60 கிலோ கலோரி அளவுக்கு சக்தி உள்ளது.

ஆரஞ்சு நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் பிரீமியம் பாலில், அரை லிட்டருக்கு 6 கிராம் கொழுப்பு மற்றும் 3.4 கிராம் புரதமும், 4.9 கிராம் மாவு சத்தும்,

740 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 90 கிலோ காலரி அளவுக்கு சக்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்