இந்திய கூடைப்பந்து சங்கத்தலைவரான தமிழர் ஆதவ் அர்ஜூன் - முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் | cmstalin
தமிழ்நாட்டில் NBA அகாடமி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்துள்ளார். இந்திய கூடைப்பந்து சங்கத்தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூன் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து பேட்டியளித்த ஆதவ் அர்ஜூன், தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையை சர்வதேச அளவில் உயர்த்தி வருகிறது என்றார்.