சாப்பிட்ட தட்டை கழுவும் போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நபர் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

Update: 2022-12-11 13:22 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, மின்சாரம் தாக்கியதில், வடமாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கீவளூர் கிராமத்தில் வாடகைக்கு வசித்து வந்த பீகார் மாநில இளைஞர் ராஜு என்பவர், வீட்டில் உணவு அருந்திய தட்டை கழுவும்போது, அதில் மின் ஒயர் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்