ஆந்திராவில் உயிரிழந்த மாவோயிஸ்டுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆடல், பாடலுடன் நடைபெற்ற வார உற்சவ விழாவின் வீடியோவை மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ளனர். ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதால் அவர்களை தடுக்கும் முயற்சியில் இருமாநில அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கிராம மக்களை ஒன்று திரட்டிய மாவோயிஸ்டுகள், உயிரிழந்த மாவோயிஸ்டுகளுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். வார உற்சவ விழா என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்சியில் பெண்களும், ஆண்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றதுடன், பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி உள்ளனர்.