திண்டுக்கல்லில், நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல், தேசிய நெடுஞ்சாலை அருகே ரங்கநாதபுரம் பகுதியில், சரக்கு வேன் ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.
அதன் டயரை கழற்றி மாற்றுவதற்காக, வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் லோடுமேன் தர்ஷன் ஆகியோர் வாகனத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி, வேன் மீது மோதியதில் சங்கர் மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் முத்துக்குமார், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.