டிஜிபி பெயரில் வந்த குறுஞ்செய்தி - காவலருக்கு காத்து இருந்த அதிரிச்சி | Tirunelveli

Update: 2022-12-05 03:42 GMT

நெல்லையில், தமிழக டிஜிபி பெயரைப் பயன்படுத்தி, ஆன்லைனில் மோசடி செய்த நைஜீரிய இளைஞர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பரிசு கூப்பன் விழுந்திருப்பதாகவும், அதற்காக முன் பணம் செலுத்த வேண்டும் எனவும், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு படத்துடன், மணிமுத்தாறு 12வது பட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திகேயனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை நம்பிய அவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பியுள்ளார். ஆனால், 2 மாதங்கள் கழித்தும் பரிசு பணம் கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த காரத்திகேயன், இதுகுறித்து நெல்லை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

நைஜீரியன் ஸ்கேம் என அழைக்கப்படும் இந்த மோசடியில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, மோசடி நபர்கள் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்த போலீசார், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்