சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதான தமிழருக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்பு சட்டங்கள் உள்ளன. அந்நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. அந்த வகையில், மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக தமிழர் தங்கராஜ் சுப்பையா 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் சுப்பயாவுக்கு 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. சட்டப்போராட்டங்களில் தங்கராஜ்க்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காத நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பலவீனமான சாட்சியங்கள் அடிப்படையில் தங்கராஜுசுப்பையா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறார் என குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் அரசு நீதிமன்றம் உத்தரவு நியாமனாது என நடவடிக்கையை ஆதரித்து வருகிறது.