ஊருக்குள் புகுந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் ஒற்றை காட்டு யானை
தர்மபுரி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாப்பாரபட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சவுளூர் கிராமத்தில் முகாமிட்டுள்ளது. இந்த யானைக்கு கர்நாடக வனத்துறையினர் ஏற்கனவே ஜிபிஎஸ் கருவி பொருத்தி தொடர் காண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர் இந்நிலையில், தர்மபுரி வனத்துறை அதிகாரிகள், வெடி வெடித்தும், நெருப்பை வைத்தும் மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.