வீடு புகுந்து திருட முயன்ற நபரை சித்ரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.. டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு

Update: 2023-02-08 14:23 GMT

அசாமில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை, கட்டி வைத்து அடித்து, சிறுநீர் கழித்து சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைலாகண்டி மாவட்டம் கட்லிசெரா தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்த‌தாக கூறப்படுகிறது. வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து, கடும் நடவடிக்கை எடுக்குமாறு, அம்மாநில டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்