அரசுக்கு வந்த தொடர் புகார்...முதல்வர் போட்ட உத்தரவு - அதிரடி காட்டிய அமைச்சர்
தாய்லாந்து, மியான்மரில் சிக்கித் தவித்த தமிழர்களில், இரண்டாம் கட்டமாக 8 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர்.மியான்மர் எல்லை பகுதிகளில் சட்டவிரோத வேலைகளில் பணிபுரிய, தமிழர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தாக்கப்படுவதாகவும் தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி முதல் கட்டமாக, அங்கிருந்த 18 தமிழர்கள் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக ஒரு கேரள நபர் உட்பட, 8 பேர் இன்று அதிகாலையில் சென்னை அழைத்து வரப்பட்டனர். இது குறித்து பேசிய வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாளை மேலும் 10 பேர் வரவுள்ளதாகவும், அனைவரையும் குடும்பத்தினருடன் ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.