காமராஜர் குறித்து அவதூறு பரப்பியதாக ஆ.ராசா மீது குற்றச்சட்டு -தமிழ்நாடு நாடார் பேரவை ஆர்ப்பாட்டம்
ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக எம்.பி.யும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக கூறி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ.ராசாவின் உருவ படத்தை கிழித்து எரிந்ததால் பரபரபரப்பு ஏற்பட்டது.